Warning: include(../header.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 82

Warning: include(../header.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 82

Warning: include() [function.include]: Failed opening '../header.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 82

Warning: include(../top_ads.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 88

Warning: include(../top_ads.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 88

Warning: include() [function.include]: Failed opening '../top_ads.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 88

சினிமா கிசுகிசு

இமயம் சேர இயக்குனரை கதாநாயகனாக்கி ஒரு படம் இயக்குவதாக இருந்தார். குடும்ப உறவுகளை மையப்படுத்திய இந்தப் படம் திடீரென கைவிடப்பட்டுள்ளது.

இதனால் சேர இயக்குனர் சித்திரமாக பேசியவ‌ரின் படத்தில் நடிப்பதற்கு தேதியை மாற்றிக் கொடுத்திருக்கிறார்.
எனக்கு காதல் மீது அபார நம்பிக்கை உண்டு, ஆனால் என்னுடைய டீரிம் கேர்ள் இதுவரை என் முன் தோன்றவில்லை என சின்ன தளபதி பரத் கூறியுள்ளார். காதல் ஒரு அற்புதமான பீலிங், அது முற்றிலும் இதயம் மற்றும் உணர்வு சமபந்தப்பட்டது. யார் கண்டார் நாளை நான் விரும்பும் பெண் என் முன் தோன்றலாம். அப்படி தோன்றினால் அந்த நிமிடமே அவள் மீது நான் காதல் கொள்ளலாம்.
அம்பிகையே ஈஸ்வ‌‌ரியே என்று இருக்க வேண்டிய நேரத்தில் படத்தில் நடிக்க சான்ஸ் வேட்டையாடுகிறார் அமெ‌ரிக்காவில் இருந்து சென்னை வந்திருக்கும் சகோத‌ரி நடிகர்களில் மூத்தவர். இவர் சில காலம் முன்பு புயல் காமெடியுடன் நெருக்கமாக இருந்தது உலகறியும். தற்போது இளம் நட்சத்திரங்கள் நடத்தும் பா‌ர்ட்டிகளில் கோப்பையும் கையுமாக ஹீரோக்களிடமும், இயக்குனர்களிடமும் சியர்ஸ் சொல்லி வருகிறார். கடவாயில் சிக்கிய கல்லாக கடுப்பில் இருக்கிறது இளமை‌ப் பட்டாளங்கள்.
பிரகாச வில்லன் தனது தாய்மொழியான கன்னடத்தில் படம் இயக்குகிறார். தமிழில் அப்பா மகள் பாசத்தைச் சொன்ன படத்தைதான் கன்னடத்தில் ‌‌ரீமேக் செய்கிறார். ஆரவாரமாக தொடங்கிய படப்பிடிப்பு இப்போது அந்தரத்தில் ஊசலாடுகிறது. பைனான்ஸ் இல்லாததால்தான் இந்த தடுமாற்றம். படத்தைவிட சொந்த வாழ்க்கையில் நடன இயக்குனருடன் ஜோடி சேருவதில்தான் பிரகாசம் ஆர்வம் காட்டுகிறார் என குமைகிறார்கள் படத்தில் பணிபு‌ரிகிறவர்கள்.
அழகு சாதனப் பொருட்களுக்கான கடை திறந்த காமெடி கவர்ச்சி நடிகை படம் தயா‌ரிக்கிறார். இதில் ஹீரோவாக நடிக்கிறார் ‌ஜி நடிகர். இதனால் நடிகை கொடுக்கும் பார்ட்டிகளில் ‌ஜி-யை தவறாமல் பார்க்க முடிகிறது. இருவரும் கட்டியணைத்து போட்டோவுக்கு போஸும் கொடுக்கின்றனர். மற்றவர்கள் வயிறு எ‌ரிய, ‌ஜி-யின் குடும்பமோ, பையனுக்கு கல்யாணம் பார்க்கிற நேரத்தில் இப்படி கண்டபடி தி‌ரியுறானே என்று கவலையில் இருக்கிறது.
'தல'யின் தைரியத்தை இளம் ஹீரோக்கள் போன் போட்டு பாராட்டுகிறார்களாம். இப்ப கோலிவுட்டின் நிஜ ஹீரோ 'தல'தானாம்.
வழக்கமாகக் கல்யாணம் செய்து கொள்ளத்தான் வரன் பார்ப்பார்கள். ஆனால், திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழத் திட்டமிட்டு வரும் பளீர் நாயகி அதற்காக திடகாத்திர மாப்புவை தேடிக்கொண்டிருக்கிறாராம்!
மீன் நடிகை திருமணத்துக்கு பிறகும் பிஸியாக இருந்தாலும் உடல் எடை கூடிவிட்டதாம், அதனால் தற்போது உடற்பயிற்சி செய்து வருகிறார்.
ரஜினி நடித்த மாப்பிள்ளை ரீமேக் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி, தபு எல்லாம் கோடி கணக்கில் பணம் கேட்டதால் தற்போது மனிஷா கொய்ராலாவை டிக் செய்துவிட்டார்களாம்
வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் இளையராஜா, கங்கை அமரன் இணைந்து நடிப்பதாக தகவல். உண்மையா என்றபோது, ‘கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனா, நடைமுறையில் சாத்தியமே இல்லை. அப்பா கங்கை அமரனையும், பெரியப்பா இளையராஜாவையும் ஷூட்டிங்கில் எப்படி இயக்க முடியும்? என்னால் முடியாது.

அவர்கள் எங்கே, நான் எங்கே? யாரோ கிளப்பி விட்டுட்டாங்க. அப்படி ஏதும் ஐடியா இல்லை’ என்ற வெங்கட், கங்கை அமரனின் ‘கரகாட்டக்காரன்’ படத்தை ரீமேக் செய்வதாக வந்த தகவலும் உறுதி செய்யப்படாதது என்றார்.

Warning: include(../right_index_ads.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 253

Warning: include(../right_index_ads.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 253

Warning: include() [function.include]: Failed opening '../right_index_ads.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 253

Warning: include(../footer.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 264

Warning: include(../footer.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 264

Warning: include() [function.include]: Failed opening '../footer.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 264
[x]