Warning: include(../header.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 82

Warning: include(../header.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 82

Warning: include() [function.include]: Failed opening '../header.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 82

Warning: include(../top_ads.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 88

Warning: include(../top_ads.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 88

Warning: include() [function.include]: Failed opening '../top_ads.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 88

சினிமா கிசுகிசு

'அங்காடித் தெரு’ அஞ்சலி வீட்டில் கத்திச் சண்டை சத்தம் காதை பிளக்கிறதாம். தினமும் அதிகாலை கிண்டி ரேஸ் கோர்ஸில் ஹார்ஸ் ரைடிங்கும் செல்கிறாராம். ஏனாம்? 'கரிகாலன்’ படத்தில் அஞ்சலிக்கு ஜான்சி ராணி ரேஞ்சுக்கு பெண் போராளி கேரக்டர். அதற்காகத்தான் விசேஷப் பயிற்சி.
ரஜினியை குசலம் விசாரிக்க, போயஸ் கார்டனும் கோபாலபுரமும் தேதி கேட்டதாம். யாரிடமும் சிக்கிக்கொள்ள விரும்பாத ரஜினி, ''உங்களுக்கு எதுக்கு சிரமம்...'' என்று இருவரையும் நாசூக்காகத் தவிர்த்துவிட்டாராம்!
ஒன்லைன் கதையை மட்டும் கையில் வைத்துக்கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கிளம்பிவிடுவது டைரக்டர் பிரபு சாலமன் வழக்கம். அவரிடம் உதவி டைரக்டராக இருந்த ராமேஷ் ராமசாமியும், பிரபு போலவே ஒன்லைனை வைத்துக்கொண்டு 'செங்காடு’ படத்தை இயக்கி முடித்து இருக்கிறார்.
அந்தக் காலத்தில் 'வைதேகி காத்திருந்தாள்’, 'குங்குமச் சிமிழ்’, 'பயணங்கள் முடிவதில்லை’ போன்ற வெள்ளி விழாப் படங்களை இயக்கிய ஆர்.சுந்தர்ராஜன், இப்போது சமையல் தொழிலில் இறங்கிவிட்டார். சமீபத்தில் நடந்த பி.வாசு இல்ல கல்யாணத்தில், சமையல் பொறுப்பு சுந்தர்ராஜனுடையதுதான். நளன் அவதாரத்துக்கு நல்ல வரவேற்பாம்.
கமல் நடித்து இயக்கும் 'விஸ்வரூபம்’ படத்தை 'ராஜபாட்டை’ பிரசாத் தயாரித்து வந்தார். இடை​யில் என்ன நடந்ததோ, தயாரிக்கும் பொறுப்பையும் கமலே எடுத்துக்கொண்டார். படத்தில் கமலுக்கு ஆன்ட்ரியா, பூஜா குமார் என்று இரண்டு ஜோடிகள்.
கட்சித் தலைவர் ஒருவர் அடிக்கடி சினிமா விழாக்களில் தலை காட்டுகிறார். ஆல்பம் பார்த்துத் தேர்வு செய்வது அண்ணாத்தேக்கு அலுத்துவிட்டதாம். அதனால், அழகிகளை நேரில் பார்த்துத் தேர்வு செய்கிறாராம்!
கவர்ச்சி பாம் ப்ளஸ் குத்துவிளக்கு நடிகைகளுக்கு ஏற்பட்ட சண்டை போலீஸ் ஸ்டேஷன் வரை சிரிப்பாய் சிரித்தது. சமரசம் நடந்தாலும், பனிப் போர் நீள்கிறதாம். நடிகையின் வீட்டுக்கு யாராவது ஆண்கள் ரகசிய விசிட் செய்தால், போலீஸ் ஸ்டேஷன் போன் அலறுகிறதாம்!
சமீபத்தில் திடீரென்று ஒரு நாள் பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு போன் செய்த ரஜினி, ''உண்மையைச் சொல்லுங்க... 'எந்திரன்’ படம் எப்படி போய்க்கிட்டு இருக்கு? எந்தெந்த தியேட்டர்ல ஓடுது? எத்தனை தியேட்டர்ல எடுத்துட்டாங்க? உங்களுக்குப் பிடிச்சிருக்கா இல்லையா? ஃப்ராங்க்கா உங்களோட ஒப்பீனியனைச் சொல்லுங்க...'' என்று கடகடவென சூப்பர் ஸ்டார் கேட்க, சிரித்துக்கொண்டே உண்மைகளைப் போட்டு உடைத்துவிட்டார் ஆனந்தன்!
இரு துருவங்கள்’ என்று வர்ணிக்கப்பட்ட அஜீத் - விஜய் இருவரும் இப்போது 'நண்பேன்டா’ ரேஞ்சுக்கு நெருங்கிய தோஸ்த். ரஜினி - கமல் மாதிரி நண்பர்களாக இருக்க வேண்டும் என்று இருவரும் ஒப்பந்தம் போட்டு இருக்கிறார்கள். வாரா வாரம் தனிமையில் சந்தித்து மணிக்கணக்கில் மனம்விட்டுப் பேசுகிறார்கள். சமீபத்தில் தனக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிபற்றி அஜீத்திடம் மனம்விட்டுப் பேசினாராம் விஜய்.
ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடிக்கத் தொடங்கி இருக்கும் அரண்மனை நாயகி, சம்பளத்துக்குப் பதிலாக வீட்டுமனைகளையே கேட்கிறாராம். தந்தால், தாராளமாக வருகிறாராம்!

Warning: include(../right_index_ads.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 253

Warning: include(../right_index_ads.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 253

Warning: include() [function.include]: Failed opening '../right_index_ads.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 253

Warning: include(../footer.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 264

Warning: include(../footer.php) [function.include]: failed to open stream: No such file or directory in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 264

Warning: include() [function.include]: Failed opening '../footer.php' for inclusion (include_path='.:/usr/local/php5/lib/php') in /home/content/14/7948114/html/tamilkurinji/cinema/kisu_kisu.php on line 264
[x]