tamilkurinji logo


 

“ஒழுக்கமான நடிகைகளுக்கு அவதூறு ஏற்படுத்துகிறார்”நடிகை ஸ்ரீரெட்டிக்கு கஸ்தூரி எதிர்ப்பு,Sri Reddy: Movies, Photos, Videos, News tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Sri,Reddy:,Movies,,Photos,,Videos,,News,tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




“ஒழுக்கமான நடிகைகளுக்கு அவதூறு ஏற்படுத்துகிறார்”நடிகை ஸ்ரீரெட்டிக்கு கஸ்தூரி எதிர்ப்பு

Monday , 23rd July 2018 10:38:57 AM



“ஸ்ரீரெட்டியின் இணையதளப் பேட்டியைப் பார்த்தேன். சினிமா ஆசைகாட்டி, தங்கள் ஈன புத்திக்குப் பெண்களை இரையாக்கிக் கொள்ளும் ஓநாய்களின் முகத்திரையை கிழித்து தொங்கப்போட்டுக் கொண்டிருக்கிறார்.


மானாவாரியாக பெயர்களை இறைக்கிறார். சிலர் பெயரைக் கேட்டதும் அதிர்ச்சியாக உள்ளது. அவர் சொல்லும் விவரங்கள் நம்பும்படியாக உள்ளன.

குறுக்கு வழி, ஏமாற்றம் நிறைந்தது. அதில் பலமுறை பயணித்திருக்கிறார் இவர். ஒருமுறைகூட அந்த வழி பயன்தரவில்லை.

அப்புறமும் தன் அணுகுமுறை தவறு என்று ஏன் இந்தப் பெண் உணரவில்லை? சமரசங்கள் செய்தாலாவது வாய்ப்பு கிட்டாதா என்று அந்தப் பெண் யோசித்ததாகவே தெரிகிறது.

சினிமாவில் உள்ள ஆண்களைத் தவறாக எடைபோட்டு, ஏமாந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறார். இல்லை, அவர் தவறாக எடைபோட்டது சினிமாவில் உள்ள பெண்களைத்தான். எல்லா நடிகைகளும் இயக்குநர்கள், நடிகர்களுக்கு இணங்கித்தான் சினிமாவில் முன்னேறியுள்ளார்கள் என்று தப்புக்கணக்குப் போட்டுவிட்டார்.

இணங்கினால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் நினைத்தது மிகப்பெரிய முட்டாள்தனம் மட்டுமல்ல, திறமையையும், உழைப்பையும், ஒழுக்கத்தையும் மூலதனமாக வைத்து முன்னேறிய என்னைப் போன்ற நடிகைகளுக்கு எவ்வளவு அவதூறு... சினிமாவில் நிறைய நல்லவர்கள் உள்ளார்கள். அவர்கள் யாரையும் இப்பெண் சந்திக்கவேயில்லையா?

உங்க கூட நடிக்கனும் சார். அதுக்கு நான் என்ன வேணா பண்ணத் தயாரா இருக்கேன் சார். என்று வாய்ப்பு கேட்டு வந்த ஒரு பெண்ணை ஒரு நடிகர் கடுமையான தொணியில் புத்தி சொல்லி அனுப்பியதை நான் நேரில் பார்த்து இருக்கிறேன்.

சினிமாவில் எல்லோருமே ஏமாற்றுப் பேர்வழிகள் இல்லை. ஏமாற்றுபவர்கள் கூட எல்லோரிடமும் வம்புக்குப் போக மாட்டார்கள். நாம் நடந்துகொள்ளும் முறையை வைத்துத்தான் நம்மிடம் எதிராளி நடந்துகொள்வார்”. இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.



    Tags :    
“ஒழுக்கமான நடிகைகளுக்கு அவதூறு ஏற்படுத்துகிறார்”நடிகை ஸ்ரீரெட்டிக்கு கஸ்தூரி எதிர்ப்பு,Sri Reddy: Movies, Photos, Videos, News tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema “ஒழுக்கமான நடிகைகளுக்கு அவதூறு ஏற்படுத்துகிறார்”நடிகை ஸ்ரீரெட்டிக்கு கஸ்தூரி எதிர்ப்பு,Sri Reddy: Movies, Photos, Videos, News tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema “ஒழுக்கமான நடிகைகளுக்கு அவதூறு ஏற்படுத்துகிறார்”நடிகை ஸ்ரீரெட்டிக்கு கஸ்தூரி எதிர்ப்பு,Sri Reddy: Movies, Photos, Videos, News tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வாய்ப்புக்காக சமரசமா? - ‘சுசிலீக்ஸ்’ புகாருக்கு பாடகி சின்மயி விளக்கம்
வாய்ப்புக்காக சமரசமா என, சுசிலீக்ஸ் புகார் தொடர்பாக பாடகி சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.சின்மயி நடத்தை குறித்து சுசிலீக்ஸில் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. வாய்ப்புக்காக சமரசம் செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டு

மேலும்...

 கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன்
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார்.எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும்

மேலும்...

 பாடகி சின்மயின் பாலியல் புகாருக்கு வைரமுத்து விளக்கம்
கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாடகி சின்மயி, பல பகீர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். உலக அளவில் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் பயன்படுத்தும் ஹாஷ்டேக்கான #MeToo மூலமே தனது தரப்பு கருத்துகளை சின்மயி, ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.சின்மயி தனது ட்விட்டரில், ‘2005 அல்லது

மேலும்...

 காந்தி தற்கொலைக்கு நான் காரணமல்ல டிவி நடிகை நிலானி உருக்கம்
சின்னத்திரை நடிகையான நிலானி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார். இவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, போலீஸ் சீருடையில் போலீசாருக்கு எதிரான கருத்துகளை கூறி வெளியான வீடியோ

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164