tamilkurinji logo
 

‘பத்மாவதி’ படத்தை வெளியிட்டால் வன்முறை வெடிக்கும் இந்து ஆர்வலர்கள் மிரட்டல் ,Padmavati row: Hindu activists in Agra threaten violence if Bhansali film is released

Padmavati,row:,Hindu,activists,in,Agra,threaten,violence,if,Bhansali,film,is,released
‘பத்மாவதி’ படத்தை வெளியிட்டால் வன்முறை வெடிக்கும் இந்து ஆர்வலர்கள் மிரட்டல்

Friday , 10th November 2017 07:43:47 PMநடிகை தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பத்மாவதி’ படத்தை வெளியிட்டால் வன்முறை வெடிக்கும் என ஆக்ரா இந்து ஆர்வலர்கள் மிரட்டல் விடுத்து உள்ளனர்.


இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்துள்ள படம், ‘பத்மாவதி’.
வரலாற்று பின்னணியை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில், நடிகர்கள் ரண்வீர் சிங் மற்றும் ஷாகித் கபூர் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.


இந்த படம் டிசம்பர் 1–ந் தேதி திரைக்கு வருகிறது. பத்மாவதி படத்தில் வரலாற்றை தவறாத சித்தரித்து இருப்பதாகவும், இந்த படம் வெளியாவதற்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

‘பத்மாவதி’ படத்தை தடை விதிக்க கோரிய தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. அலாகாபாத் ஐகோர்ட்டும் இதுதொடர்பான வழக்கை முன்னெடுக்க மறுத்துவிட்டது.

இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பத்மாவதி’ படத்தை வெளியிட்டால் வன்முறை வெடிக்கும் என ஆக்ரா இந்து ஆர்வலர்கள் மிரட்டல் விடுத்து உள்ளனர். பத்மாவதி படத்தை வெளியிட்டால் கடும் விளைவுகள் நேரிடும் என திரையரங்குகளுக்கு இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்து உள்ளது.

பத்மாவதி திரைப்படம் திரையில் வெளியாவதற்கு முன்னதாகவே ராஜஸ்தான், குஜராத், மராட்டியம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விமர்சனங்களையும், சர்ச்சையையும், எதிர்ப்பையும் சந்தித்து உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ராஜ்புத் இனத்தினர்கள் பெருமளவில் கிடையாது, இருப்பினும் இந்து அமைப்புகள் தரப்பில் எதிர்ப்பை சந்தித்து உள்ளது.

பல்வேறு அரசியல் அமைப்புகள் தரப்பிலும் பத்மாவதி திரைப்படம் வெளியிடுவதற்கு எதிராக மிரட்டல் வெளியாகி உள்ளது.

இந்து ஜக்ரான் மஞ்ச் அமைப்பின் மாவட்ட தலைவர் அமித் சவுதாரி பேசுகையில், இந்து கலாச்சாரத்திற்கு எதிரான திரைப்படங்களை எதிர்ப்போம் என கூறிஉள்ளார்.

முன்னாள் உத்தரபிரதேச மாநில மந்திரி மற்றும் பா.ஜனதா தலைவர் ராஜா மகேந்திர அரிதிமான் சிங், இது ராஜ்புத் இனத்தவர்களின் கெளவுரம் சம்பந்தப்பட்ட விஷயம் அனைத்து திரையரங்குகளிலும் படத்தை தடை செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

 ராஜஸ்தான், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்திலும் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.    Tags :    
‘பத்மாவதி’ படத்தை வெளியிட்டால் வன்முறை வெடிக்கும் இந்து ஆர்வலர்கள் மிரட்டல் ,Padmavati row: Hindu activists in Agra threaten violence if Bhansali film is released ‘பத்மாவதி’ படத்தை வெளியிட்டால் வன்முறை வெடிக்கும் இந்து ஆர்வலர்கள் மிரட்டல் ,Padmavati row: Hindu activists in Agra threaten violence if Bhansali film is released ‘பத்மாவதி’ படத்தை வெளியிட்டால் வன்முறை வெடிக்கும் இந்து ஆர்வலர்கள் மிரட்டல் ,Padmavati row: Hindu activists in Agra threaten violence if Bhansali film is released
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மீண்டும் இணையும் ‘விக்ரம் வேதா’ ஜோடி
விக்ரம் வேதா’ படத்தில் ஜோடியாக நடித்த மாதவன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவரும் மறுபடியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. விஜய் சேதுபதி -மாதவன்  முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த

மேலும்...

 டிராபிக் ராமசாமி திரைப்படம் விஜய் பிறந்தநாளன்று வெளியீடு
டிராபிக் ராமசாமி’ படம், விஜய் பிறந்த நாளில் வெளியாவது பெருமையாக இருக்கிறது படத்தின் டைரக்டர் கூறினார்.சமுதாயத்துக்கும், சட்டத்துக்கும் தீங்கு செய்தவர்களை திரைப்படம் மூலமாக சுட்டிக்காட்டி, ‘புரட்சி இயக்குனர்’ என்று பெயர் எடுத்தவர், எஸ்.ஏ.சந்திரசேகர். இவர், சமூக சேவகர் ‘டிராபிக் ராமசாமி’யாக ஒரு

மேலும்...

 கோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் கைது
கடந்த வருடம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பின்போது 2 துணை நடிகர்கள் அணையில் இருந்து தவறி விழுந்து இறந்தனர். இது தொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.இந்த நிலையில் கோர்ட்டில் ஆஜராகாததால் தயாரிப்பாளர்

மேலும்...

 ஆறுதல் கூறுவது எப்படி என விஜயிடம் இருந்து ரஜினி கற்க வேண்டும் : அமீர் விமர்சனம்
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி என்பதை விஜயிடம் இருந்து ரஜினிகாந்த் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் அமீர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in