tamilkurinji logo
 

‘காளி’ படத்துக்கு தடை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு,Madras HC vacates interim stay on Vijay Antony's 'Kaali'

Madras,HC,vacates,interim,stay,on,Vijay,Antony's,'Kaali'



‘காளி’ படத்துக்கு தடை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Thursday , 12th April 2018 07:58:14 PM



 விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘காளி’ படத்துக்கு தடை விதிக் கக் கோரி ‘பிக்சர் பாக்ஸ்’ நிறுவனம் சார்பில் வில்லியம் அலெக்ஸாண்டர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில், ‘‘விஜய் ஆண்டனி நடித்த ‘அண்ணாதுரை’ படத்தை வெளியிட்டதன் மூலம் எனக்கு ரூ.4.73 கோடி இழப்பு ஏற்பட்டது. இதை ஈடு செய்யாமல் அவர் நடித்துள்ள ‘காளி’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ‘காளி’ படத்தை வெளியிட தடை விதித்தும், ஏப்.11-க்குள் ரூ.4.73 கோடியை விஜய் ஆண்டனி நீதிமன்றத்தில் செலுத்தினால் தடை நீங்கும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து விஜய் ஆண்டனி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, ஆதிகேசவலு ‘‘பிக்சர் பாக்ஸுக்கு ரூ.2 கோடியை விஜய் ஆண்டனி உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் டிபாசிட் செய்துவிட்டு படத்தை திரையிடலாம்’’ என உத்தரவிட்டனர்.



    Tags :    
‘காளி’ படத்துக்கு தடை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு,Madras HC vacates interim stay on Vijay Antony's 'Kaali' ‘காளி’ படத்துக்கு தடை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு,Madras HC vacates interim stay on Vijay Antony's 'Kaali' ‘காளி’ படத்துக்கு தடை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு,Madras HC vacates interim stay on Vijay Antony's 'Kaali'
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in