வைரமுத்து தனி மனிதர் அல்ல; இயக்குனர் பாரதிராஜா அறிக்கை,Vairamuthu-is-not-a-single-person tamil news india news
tamil seithigal india seithigal tamil cinema news
வைரமுத்து தனி மனிதர் அல்ல; இயக்குனர் பாரதிராஜா அறிக்கை
Friday , 12th January 2018 08:22:07 PM
தமிழகத்தில் எழுத்து, பேச்சு, கருத்து சுதந்திரம் எல்லாம் இல்லாமல் போய்விட்டது என்றும் வைரமுத்து என்பவர் தனி மனிதர் அல்ல, தமிழகத்தின் பெரு அடையாளம் என்றும் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில், தனிமனித உரிமை பறிக்கப்பட்டு, எவ்வளவோ நாட்களாகி விட்டன. எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது.
சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கசப்பான சம்பவம் என்னை இரவெல்லாம் தூங்கவிடாமல் செய்தது. தமிழகத்தில் வரலாற்றில் புலவர்கள், எழுத்தாளர்கள் கவிஞர்கள் தோன்றி இறவாப்புகழ் அடைந்திருக்கிறார்கள்.
இன்று, நம் கொடுப்பினை நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பெருங்கவிஞன், கவிப்பேரரசு வைரமுத்து, தமிழைத் திசைகள் தோறும் தெரியப் படுத்தியவர்.
மணிமேகலையும், சிலப்பதிகாரமும் இரட்டைக்காப்பியங்கள் என்றால், வைரமுத்து படைத்த கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சி காவியமும் எளிய மனிதர்களின் இரட்டைக் காப்பியமில்லையா? அந்த அளவில் தமிழை எளிமைப்படுத்திய கவிஞனை இழிசொற்களால் எப்படிப் பேசலாம்?
வைரமுத்து என்பவர் தனிமனிதரல்ல, தமிழினத்தின் பெருஅடையாளம் என்பதை விமர்சிப்பவர்களே, உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு படைப்பாளன் தன் கருத்துகளைச் சொல்லலாம். இல்லை மேற்கோள் காட்டலாம் அதை அட்சர சுத்தமாக தவறென்று தட்டிக் கேட்க எவனுக்கும் அதிகாரமில்லை.
சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சமகால இலக்கியம் என்ற பாகுபாடில்லாமல் மறைந்த கவிஞர்களை, எழுத்தாளர்களை மேடை தோறும், முழங்கி அவர்களின் பெருமைகளைப் பட்டியலிடும் கவிஞனை எப்படி நாக்கில் நரம்பில்லாமல் ஒருவர் பேசுவது? எச்.ராஜா பேசியது அநாகரீகத்தின் உச்சம். ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில், ஆண்டாளை எளிய மனிதனுக்கும் புரியும் விதத்தில் பேசிய கவிஞனின் பிறப்பை இழிசொல்லால் இழிவுபடுத்தி விட்டார்.
வைணவத்தைத் தமிழாக்கிய திருப்பாவையை, கருவறையிலிருந்து தெருவுக்குக் கொண்டு வந்து சாதாரண மனிதர்களின் காதுகளில் ஊற்றிய கவிஞனைத் தரம் தாழ்த்திப் பேசுவதா? திருப்பாவை சமஸ்கிருதமல்ல, தமிழ் என்பதை எச்.ராஜா உணர்ந்து கொள்ளவேண்டும்.
நிறைய மனிதர்களின் வாழ்வுக்கு ஒரு வழிகாட்டியாய் வாழும் ஒரு மனிதனை நாக்கில் நரம்பில்லாமல் எப்படி பேச முடியும்? கவனமாகப் பேசுங்கள். எச்.ராஜா போல நிறைய மனிதர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள். ஆனால், வைரமுத்து போல சில நல்ல அடையாளங்கள் தான் இருக்கின்றன.
எச்.ராஜா பேச்சு எங்கள் தமிழர்களைப் பழித்தது. தமிழ் உணர்வுகளைச் சிதைத்தது. தமிழனாக இருந்தால் அப்படிப் பேசியிருக்கமாட்டார். நாங்கள் தன்மானத்தையும், வீரத்தையும், விவேகத்தையும் இழக்கவில்லை என்பதை எச்சரிக்கை செய்கிறேன். இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.
காவிரியில் எப்போது அரசியல் கலந்ததோ,அப்போதே கறைபடத் தொடங்கியது- நடிகர் பிரகாஷ்ராஜ் நடிகர் பிரகாஷ்ராஜ் காவிரி விவகாரம் தொடர்பாக அரசியல்வாதிகளை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் நடக்கும் என்று அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் பல
“என் அண்ணன் மணிரத்னத்துக்கு நன்றி; ஸ்ரீதேவியை இப்போ மிஸ் பண்றேன்” - ஏ.ஆர்.ரஹ்மான் 65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், ‘காற்று வெளியிடை’ படத்தின் பாடல்கள் மற்றும் ‘மாம்’ படத்தின் பின்னணி இசை என இரண்டு தேசிய விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த விருதுகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், “இந்த தேசிய
காவிரிக்காக போராடுபவர்களை வாழ்த்த முடியாது வணங்குகிறேன் - நடிகர் சத்யராஜ் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதிய நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் சுயநலமின்றி போராடும் அனைவருக்கும் தனது வணக்கத்தை தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என்பதற்காக போராடும் போராட்ட களத்தில் இருக்கும் போராளிகள்
கறுப்பு என்பது சர்வதேச மொழி, இந்தியப் பிரதமருக்கு புரிந்திருக்கும் - வைரமுத்து
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு காட்டியதற்கு கவிஞர் வைரமுத்து, கறுப்பு என்பது சர்வதேச மொழி, மோடிக்கு புரிந்திருக்கும் என்று கூறியுள்ளார்.5 கிலோமீட்டர் தூரத்தைக் கூட சாலையில் பயணிக்க முடியாமல், ஹெலிகாப்டரில் பறந்து கடக்க வேண்டிய நிலை. எங்கு பார்த்தாலும்