tamilkurinji logo


 

முகமூடி - விமர்சனம்,Mugamoodi

Mugamoodi
முகமூடி - விமர்சனம்

Saturday , 8th September 2012 07:31:23 PMகொள்ளைக் கும்பலின் 'முகமூடி’யைக் கிழிக்கும் சூப்பர் ஹீரோ!
 
திட்டமிட்டு முகமூடி அணிந்து கொலை, கொள்ளையில் ஈடுபடுகிறார் நரேன். யதேச்சையாக முகமூடி அணிந்து அவர்களுக்கு இடையூறு செய்கிறார் ஜீவா. பிறகு, அந்த 'முகமூடி’ அடையாளத்துடனேயே கெட்டவர்களை அழிக்... ஆவ்வ்...கிறார்!    

சூப்பர் ஹீரோ உருவாகும் வித்தையை, தேவையை முன்பாதியில் அழுத்தமாக விதைத்துவிட்டு, பின்பாதியில் அந்த 'பில்ட்-அப்’பைத் தக்கவைக்கத் தவறிவிட்டீர்களே மிஷ்கின்?  

'புரூஸ்லீ’ என்று தனக்குத்தானே பெயர் வைத்துக்கொண்டு, குங்ஃபூ கற்றுக்கொண்டு ஊர் சுற்றும் இளைஞனாக ஜீவா. காதல் கஜல் இசைக்கும்போது முகமொழியிலும் 'சூப்பர் மேன்’ பாரம் சுமக்கும்போது உடல்மொழியிலும் வெரைட்டி வித்தியாசம். 'என் கையை வெட்டுங்கடா’ என்று தில் காட்டும்போதும் சூப்பர் மேன் கெட்டப்பில் இருக்கும்போது பெயர் கேட்டதும் 'புரூ...’ என்று உண்மை உளறி... பிறகு யோசித்து 'முகமூடி’ என்று பம்மும் இடத்திலும் ஈர்க்கிறார்.

சுத்தியலைத் தோளில் சாய்த்துக்கொண்டு அன்ன நடை நடப்பதாகட்டும்; எந்தச் சூழ்நிலையிலும் பதறாமல் எதிராளியின் சைக்காலஜியைச் சிதைப்பதாகட்டும்... சூப்பர் மேனை எதிர்க்கும் சூப்பர் வில்லனாக நரேன் கச்சிதம். ஆனால், அந்த க்ளைமாக்ஸ் பெர்ஃபார்மன்ஸ் பெரும் திருஷ்டி. சூப்பர் ஹீரோ படத்தில் கதாநாயகி இத்தனை சுமாராகவா இருப்பார்? ஜீவாவை செங்கல், செருப்பு, கம்பு வைத்தெல்லாம் அடிப்பதோடு ஒதுங்கிக்கொள்பவர் மீது நமக்கு எந்த உணர்வும் தோன்றுவேனா என்கிறது.
 
குழந்தைகளையும் பெரியவர்களையும் ஈர்க்கும் சாகசம்தான் ஒரு சூப்பர் ஹீரோவுக்கான அடிப்படைக் குணம். ஆனால், படத்தில் ஓடிக்கொண்டே இருப்பது மட்டுமே ஜீவா செய்யும் சாகசம். மாடி மாடியாகத் தாவி ஓடுகிறார், துறைமுக கன்டெய்னர்கள் மீது ஓடுகிறார், கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வீடு வீடாகக் கதவு தட்டி வில்ல னைக் கண்டுபிடிக்கிறார், க்ளைமாக்ஸில் கைகள் கட்டப்பட்டு தேமேவென்று வேடிக்கைபார்த்துக் கொண்டு இருக்கிறார். 'இப்படி ஒரு சூப்பர் ஹீரோ நமக்கு உயிர்ப் பிச்சை தருவதா?’ என்று எண்ணித்தான் க்ளைமாக்ஸில் நரேன் அப்படி ஒரு முடிவு எடுத்தாரோ?

'அட... இவன் சூப்பர் ஹீரோ இல்லை... நம்மில் ஒருவன்’ என்றால், அதைச் செய்ய எதற்கு அந்த முகமூடி? தமிழ் சினிமாவின் சாதா ஹீரோக்களே கழித்துக்கட்டிவிட்ட சாகசங்களைக் கொண்டா ஒரு சூப்பர் ஹீரோ ஸ்கெட்ச் போடுவான்? போலீஸே நுழைய முடியாத வில்லனின் இருப்பிடத்தில் கிரிஷ் கர்னாட் அண்ட் கோ சோப்பு டப்பாவோடு பபுள்ஸ் விடுவதை எந்த வகையில் சேர்ப்பது?

முகமூடிக்கான டெம்போவைக் கொஞ்ச மேனும் தக்கவைப்பது கே-யின் பின்னணி இசையும் சத்யாவின் ஒளிப்பதிவும் மட்டுமே.

சாமானியனா... சாகச மனிதனா... குழம்பித் தவிக்கிறான் இந்த முகமூடி!

நன்றி - ஆனந்த விகடன்    Tags :    
முகமூடி - விமர்சனம்,Mugamoodi முகமூடி - விமர்சனம்,Mugamoodi முகமூடி - விமர்சனம்,Mugamoodi
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164