tamilkurinji logo


 

மாணவி பிரதீபா தற்கொலை செய்தது வருத்தம் அளிக்கிறது - நடிகர் ரஜினிகாந்த்,Rajinikanth: Movies, Photos, Videos, News & Biography | tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Rajinikanth:,Movies,,Photos,,Videos,,News,&,Biography,|,tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




மாணவி பிரதீபா தற்கொலை செய்தது வருத்தம் அளிக்கிறது - நடிகர் ரஜினிகாந்த்

Tuesday , 5th June 2018 07:19:59 PM



மே 6-ல் நடந்த நீட் தோ்வை நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் பேர் எழுதினா். தமிழ் மொழியில் சுமார் 24,720 பேர் எழுதி  இருந்தனர்.


தமிழகத்தில் மொத்தம் 1.7 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர். இதனிடையே தேர்வு முடிவு நேற்று 12.30 மணியளவில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியால் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெருவலூர் பகுதியை சேர்ந்த மாணவி பிரதீபா என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.


கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா 12-ம் வகுப்பு தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.


இதே போன்று அரசு பள்ளியில் படித்த பிரதீபா பத்தாம் வகுப்பில் 495 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற போதிலும் நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாத காரணத்தினால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில், ‘நீட் தேர்வு தோல்வியால் மாணவி உயிரிழந்தது பரிதாபத்திற்கு உரியது.

இதனை தடுக்க நாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவி குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள்’ என சென்னை விமானநிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வருடம் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



    Tags :    
மாணவி பிரதீபா தற்கொலை செய்தது வருத்தம் அளிக்கிறது - நடிகர் ரஜினிகாந்த்,Rajinikanth: Movies, Photos, Videos, News & Biography | tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema மாணவி பிரதீபா தற்கொலை செய்தது வருத்தம் அளிக்கிறது - நடிகர் ரஜினிகாந்த்,Rajinikanth: Movies, Photos, Videos, News & Biography | tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema மாணவி பிரதீபா தற்கொலை செய்தது வருத்தம் அளிக்கிறது - நடிகர் ரஜினிகாந்த்,Rajinikanth: Movies, Photos, Videos, News & Biography | tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வாய்ப்புக்காக சமரசமா? - ‘சுசிலீக்ஸ்’ புகாருக்கு பாடகி சின்மயி விளக்கம்
வாய்ப்புக்காக சமரசமா என, சுசிலீக்ஸ் புகார் தொடர்பாக பாடகி சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.சின்மயி நடத்தை குறித்து சுசிலீக்ஸில் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. வாய்ப்புக்காக சமரசம் செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டு

மேலும்...

 கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன்
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார்.எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும்

மேலும்...

 பாடகி சின்மயின் பாலியல் புகாருக்கு வைரமுத்து விளக்கம்
கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாடகி சின்மயி, பல பகீர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். உலக அளவில் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் பயன்படுத்தும் ஹாஷ்டேக்கான #MeToo மூலமே தனது தரப்பு கருத்துகளை சின்மயி, ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.சின்மயி தனது ட்விட்டரில், ‘2005 அல்லது

மேலும்...

 காந்தி தற்கொலைக்கு நான் காரணமல்ல டிவி நடிகை நிலானி உருக்கம்
சின்னத்திரை நடிகையான நிலானி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார். இவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, போலீஸ் சீருடையில் போலீசாருக்கு எதிரான கருத்துகளை கூறி வெளியான வீடியோ

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164