tamilkurinji logo
 

பிரபல தமிழ் திரைப்பட ஒளிப்பதிவாளர் மாரடைப்பால் திடீர் மரணம்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


பிரபல தமிழ் திரைப்பட ஒளிப்பதிவாளர் மாரடைப்பால் திடீர் மரணம்

Thursday , 9th November 2017 06:52:16 PM




பிரபல ஒளிப்பதிவாளர் ப்ரியன் சென்னையில் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 55.

ப்ரியனின் இயற்பெயர் நாகேந்திரன். இவர் விருதுநகரைச் சேர்ந்தவர். தன் சித்தப்பா மூலம் நடிகர் பாலாஜியின் அறிமுகம் கிடைக்க அவர் வழியாக பாலுமகேந்திராவிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். 'மூன்றாம் பிறை', 'சந்தியராகம்', 'யாத்ரா', 'நீங்கள் கேட்டவை' என பாலுமகேந்திரா படங்களில் தொடர்ந்து பணியாற்றினார்.

ஒளிப்பதிவாளராக 'தெனாலி'யில் கமல் தொடங்கி 'வரலாறு' அஜித், 'வேலாயுதம்' விஜய், என்று விரிந்து விக்ரம், சூர்யா, விஷால், பிரசாந்த், சிம்பு, பரத் என்று பல முன்னணி நாயகர்களுடன் பணிபுரிந்திருக்கிறார்.

'தொட்டாசிணுங்கி', 'பொற்காலம்', 'தேசியகீதம்', 'வெற்றிக்கொடி கட்டு', 'ஆனந்த பூங்காற்றே', 'தெனாலி', 'ஸ்டார்', 'மஜ்னு', 'தமிழ்', 'பாலா', 'சாமி', 'கோவில்', 'அருள்', 'உதயா', 'ஐயா', 'ஆறு', 'வல்லவன்', 'திமிரு', 'தாமிரபரணி', 'வேல்', 'சேவல்', 'தோரணை', 'சிங்கம்', 'வேலாயுதம்', 'சிங்கம் 2', 'பூஜை', 'சிங்கம் 3' என ப்ரியன் ஒளிப்பதிவு செய்த படங்களின் பட்டியல் பெரிது.

ஹரியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் இவரே. 'வேங்கை' படத்தைத் தவிர ஹரியின் எல்லா படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தற்போது படப்பிடிப்பில் இருக்கும் 'சாமி 2' படத்துக்கும் ப்ரியன்தான் ஒளிப்பதிவாளர்.

இந்நிலையில் ப்ரியன் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



    Tags :    
பிரபல தமிழ் திரைப்பட ஒளிப்பதிவாளர் மாரடைப்பால் திடீர் மரணம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பிரபல தமிழ் திரைப்பட ஒளிப்பதிவாளர் மாரடைப்பால் திடீர் மரணம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பிரபல தமிழ் திரைப்பட ஒளிப்பதிவாளர் மாரடைப்பால் திடீர் மரணம்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஜோதிகா வசனத்தால் சர்ச்சையைக் கிளப்பும்‘நாச்சியார்’ டீஸர்!
பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள 'நாச்சியார்' படத்தின் டீஸரில், ஜோதிகா பேசியுள்ள வசனத்தால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நாச்சியார்'. இளையராஜா இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி ஸ்டூடியோஸ் மற்றும்

மேலும்...

 அற்புதமான சமூகக் கருத்தைச் சொல்லியிருக்கிறது 'அறம்': இயக்குநர் விஜய்
சினிமாவில் அற்புதமான சமூகக் கருத்தைச் சொல்லியிருக்கிறது 'அறம்' என்று இயக்குநர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அறம்'. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. விமர்சன ரீதியாக

மேலும்...

 டிவிட்டரில் ஆபாச படத்தை நீக்க நடிகை அனுயா போலீசில் புகார்
கடந்த சில மாதங்களுக்கு முன் திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவின் ‘டுவிட்டர்’ பக்கத்தில் சினிமா நட்சத்திரங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுசித்ரா தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தை வி‌ஷமிகள் சிலர் முடக்கி அவதூறு கருத்துகளை பதிவு செய்துள்ளனர்

மேலும்...

 எங்கு வேண்டுமானாலும் சொத்துகள் வாங்க உரிமை இருக்கிறது: அமலாபால்
இந்தியப் பிரஜையாக எங்கு வேண்டுமானாலும் சொத்துகள் வாங்க எனக்கு உரிமை இருக்கிறது என்று கார் சர்ச்சைத் தொடர்பாக அமலாபால் கடுமையாக சாடியிருக்கிறார்.புதுச்சேரியில் விலையுயர்ந்த கார்கள் பதிவு செய்தது தொடர்பாக பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. அமலாபால் உள்ளிட்ட பலரின் பெயர்களும் இச்செய்தியில் அடிபட்டுக்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in