tamilkurinji logo


 

பாடகி சின்மயின் பாலியல் புகாருக்கு வைரமுத்து விளக்கம்,After Chinmayi Tweets on Vairamuthu, Samantha and Varalaxmi ...tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

After,Chinmayi,Tweets,on,Vairamuthu,,Samantha,and,Varalaxmi,...tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,
பாடகி சின்மயின் பாலியல் புகாருக்கு வைரமுத்து விளக்கம்

Thursday , 11th October 2018 07:23:25 PMகவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாடகி சின்மயி, பல பகீர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.


உலக அளவில் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் பயன்படுத்தும் ஹாஷ்டேக்கான #MeToo மூலமே தனது தரப்பு கருத்துகளை சின்மயி, ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


சின்மயி தனது ட்விட்டரில், ‘2005 அல்லது 2006 என்று நினைக்கிறேன். ஸ்விட்சர்லாந்தில் ஒரு கச்சேரிக்காக சென்றிருந்தோம். அங்கு கச்சேரியை அரங்கேற்றிய பிறகு, அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் என்னையும் என் அம்மாவையும் மட்டும் இருக்குமாறு தெரிவித்தார்.

எதற்கு என்று நாங்கள் கேட்டதற்கு, ‘வைரமுத்து இருக்கும் ஓட்டலுக்கு செல்லுங்கள்’ என்று அவர் தெரிவித்தார். எதற்கு என்று கேட்டதற்கு, ‘அவருக்கு ஒத்துழைப்புக் கொடுங்கள்’ என்றார். நான் முடியாது என்று மறுத்துவிட்டேன். சென்னைக்கு அடுத்த விமானம் மூலம் திரும்பி விட்டோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

அவர் இந்த சம்பவத்துடன் நிற்காமல், ‘சில ஆண்டுகளுக்கு முன்னர் வைரமுத்து, அவர் எழுதிய புத்தக வெளியீட்டிற்கு என்னை அழைத்து, தமிழ்த் தாய் வாழ்த்து பாடுமாறு கேட்டார்.


நான் முடியாது என்று மறுத்துவிட்டேன். அதற்கு அவர், ‘அந்த அரசியல்வாதியைப் பற்றி நீ தரைக்குறைவாக பேசினாய் என்று சொல்லிவிடுவேன்’ என்று மிரட்டினார்.

இதையடுத்து என்னை, என் வீட்டிலிருந்தவர்கள் தேற்றினர். அதன் பிறகு வைரமுத்துவின் மேலாளருக்கு அழைத்து, ‘நான் அதே அரசியல்வாதியிடம் சென்று அப்படி பேசவில்லை என்பதை எடுத்துக் கூறுவேன். நான் இதுவரை அரசியல் குறித்து பொது இடங்களில் பேசியதில்லை என்பதை கூறுவேன்.

அவர் என்னை நம்புவார்’ என்று தெரிவித்தேன். தற்போது, என்னிடம் அவர் குறித்து மற்றவர்கள் ஏன் குற்றம் சுமத்த மறுக்கிறார்கள் என்று கேட்கிறார்கள். இப்போது ஏன் என்று புரிகிறதா?’ என்று ட்வீட்டினார்.

சின்மயிக்கு நடிகர் சித்தார்த் ஆதரவுக்கரம் நீட்டினார். அவரும் ட்விட்டர் மூலமே சின்மயிக்கு ஆதரவாக பதிவிட்டார். வைரமுத்துவுக்கு எதிராக பத்திரிகையளர் சந்தியா மேனன், தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறார். அவர், பாதிக்கப்பட்ட பல பெண்களின் கதைகளை ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், தன் மீதான குற்றசாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில், அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது

.
அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
    Tags :    
பாடகி சின்மயின் பாலியல் புகாருக்கு வைரமுத்து விளக்கம்,After Chinmayi Tweets on Vairamuthu, Samantha and Varalaxmi ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema பாடகி சின்மயின் பாலியல் புகாருக்கு வைரமுத்து விளக்கம்,After Chinmayi Tweets on Vairamuthu, Samantha and Varalaxmi ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema பாடகி சின்மயின் பாலியல் புகாருக்கு வைரமுத்து விளக்கம்,After Chinmayi Tweets on Vairamuthu, Samantha and Varalaxmi ...tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வாய்ப்புக்காக சமரசமா? - ‘சுசிலீக்ஸ்’ புகாருக்கு பாடகி சின்மயி விளக்கம்
வாய்ப்புக்காக சமரசமா என, சுசிலீக்ஸ் புகார் தொடர்பாக பாடகி சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.சின்மயி நடத்தை குறித்து சுசிலீக்ஸில் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. வாய்ப்புக்காக சமரசம் செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டு

மேலும்...

 கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன்
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார்.எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும்

மேலும்...

 காந்தி தற்கொலைக்கு நான் காரணமல்ல டிவி நடிகை நிலானி உருக்கம்
சின்னத்திரை நடிகையான நிலானி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார். இவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, போலீஸ் சீருடையில் போலீசாருக்கு எதிரான கருத்துகளை கூறி வெளியான வீடியோ

மேலும்...

 சீமராஜா'வின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி
'சீமராஜா’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.பொன்ராம்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான மூன்றாவது படம் ‘சீமராஜா’. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், லால், சூரி ஆகியோர் நடிப்பில் உருவான

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164