tamilkurinji logo


 

பத்மாவத் படத்திற்கு எதிராக வடமாநிலங்களில் போராட்டம் - வன்முறை பரவுகிறது,Padmaavat release LIVE: More than 100 Karni Sena members detained across India as protests rage on tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Padmaavat,release,LIVE:,More,than,100,Karni,Sena,members,detained,across,India,as,protests,rage,on,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




பத்மாவத் படத்திற்கு எதிராக வடமாநிலங்களில் போராட்டம் - வன்முறை பரவுகிறது

Wednesday , 24th January 2018 06:08:11 PM




சர்ச்சைக்கு உரிய இந்திப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பத்மாவதி’ படம், ராஜபுத்ர வம்சத்தை சேர்ந்த ராணி பத்மாவதியின் வரலாற்றை தவறாக திரித்து எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ‘பத்மாவதி’ படத்துக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடந்தன.

அதைத் தொடர்ந்து, படத்தின் பெயரை ‘பத்மாவத்’ என மாற்றியும், காட்சிகளை மாற்றி அமைத்தும் வெளியிட தணிக்கை வாரியம் அனுமதி அளித்தது. இந்தப் படம் நாளை (25-ந் தேதி) வெளியாகிறது.


படத்திற்கு மாநில அரசுக்கள் பிறப்பித்த உத்தரவுகளை சுப்ரீம் கோர்ட்டு அகற்றியது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது மாநில அரசுக்களே என்று கூறி படத்தை வெளியிட தடையில்லை என்றது.

படத்திற்கு நிலவியை தடையை சுப்ரீம் கோர்ட்டு நீக்கியதை அடுத்து, வடமாநிலங்களில் போராட்டம் வெடித்து உள்ளது. சர்ச்சைக்கள் வெடித்த நிலையில் பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஹிமாலயா திரையரங்கத்திற்கு வெளியே வாகனங்கள் சூறையாடப்பட்டது. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக சிசிடிவி கட்சிகளை கொண்டு 16 பேரை போலீஸ் கைது செய்து உள்ளது.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வடமாநிலங்களில் கர்னி சேனாவினர் தரப்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. குஜராத்தில் போராட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்ட சுமார் 48 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். குஜராத் மாநிலத்திலும் திரையரங்களில் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகி உள்ளது.

 ராஜஸ்தான் மாநிலம் சித்தோகார்க்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. போராட்டத்தின் ஒரு பகுதியாக அங்கு 1,900க்கும் அதிகமான பெண்கள் தீகுளிக்க பதிவு செய்து உள்ளனர் என கர்னி சேனா தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் கர்னி சேனாவின் சித்தோகார்க் பிராந்திய தலைவர் கோவிந்த் சிங் கைது செய்யப்பட்டார்.

மாநில கர்னி சேனாவின் செய்தித் தொடர்பாளர் ராஜ்புத்ர சிங் பேசுகையில், “எங்களுடைய போராட்டத்தை முடக்க போலீஸ் முயற்சி செய்கிறது.

எங்களை பேரணி நடத்தவும், போராட்டம் நடத்தவும் அனுமதிக்கவில்லை, நகரத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.” என்றார். கர்னி சேனாவினர் ஜெய்பூர் - டெல்லி சாலையை மறித்து உள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியது. சித்தோகார்க் பகுதியில் போராட்டமும் வெடித்து உள்ளது.


உத்தரபிரதேச மாநிலத்திலும் கர்னி சேனாவினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். லக்னோவில் திரையரங்குகளுக்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. குர்கானிலும் திரையரங்களுக்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மதுராவில் புதிஷ்வர் ரெயில் நிலையத்தில் ரெயில் மறிக்கப்பட்டது எனவும் ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது. மீரட் பகுதியிலும் திரையரங்குகள் மீது தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்திலும் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

மீரட்டில் திரையரங்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

தலைநகர் லக்னோவிலும் படத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. லக்னோவில் பத்மாவத் திரைப்படம் வெளியிடப்பட்டால் தீக்குளிப்போம் என மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து முன்கூட்டி வெளியிடும் காட்சிகள் திரையரங்கில் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பான நோட்டீஸ் வெளியே ஒட்டப்பட்டு உள்ளது.  

கர்னி சேனா தலைவர் லோகேந்திர சிங் கால்வி பேசுகையில், “பன்சாலியின் படத்திற்கு எதிராக மக்களால் சுயமாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு உள்ளது. பத்மாவத் படத்திற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்ற எங்களுடைய நிலைப்பாட்டில் ஸ்திரமாக உள்ளோம். நாங்கள் படத்தை வெளியிட அனுமதிக்கவே மாட்டோம், எப்படியாகிலும் படத்தை அனுமதிக்க மாட்டோம்,”என்றார்.

குர்கான் சோக்னா சாலையில் போராட்டம் நடத்தியவர்கள் பேருந்தை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

மராட்டிய மாநிலத்திலும் படத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. மும்பையில் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவம் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நாசிக்கில் கங்காபூர் அணையருகே குவிந்த 20 கர்னி சேனா ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர். முன்னதாக அணையில் குதித்து தற்கொலை செய்வோம் என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. அங்கும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

வட மாநிலங்கள் முழுவதும் போராட்டம் வெடித்து வன்முறை பரவி வருகிறது. போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. இருப்பினும் வன்முறை சம்பவங்கள் பதிவாகிய வண்ணமே உள்ளது. திரையரங்குகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

திரையரங்குகள் போராட்டம் காரணமாக படத்தை வெளியிடவும் தயக்கம் காட்டும் நிலையும் காணப்படுகிறது. குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் திரையரங்க உரிமையாளர்கள் பின்வாங்கும் நிலை வெளிப்படையாகவே காணப்படுகிறது.



    Tags :    
பத்மாவத் படத்திற்கு எதிராக வடமாநிலங்களில் போராட்டம் - வன்முறை பரவுகிறது,Padmaavat release LIVE: More than 100 Karni Sena members detained across India as protests rage on tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
பத்மாவத் படத்திற்கு எதிராக வடமாநிலங்களில் போராட்டம் - வன்முறை பரவுகிறது,Padmaavat release LIVE: More than 100 Karni Sena members detained across India as protests rage on tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
பத்மாவத் படத்திற்கு எதிராக வடமாநிலங்களில் போராட்டம் - வன்முறை பரவுகிறது,Padmaavat release LIVE: More than 100 Karni Sena members detained across India as protests rage on tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வாய்ப்புக்காக சமரசமா? - ‘சுசிலீக்ஸ்’ புகாருக்கு பாடகி சின்மயி விளக்கம்
வாய்ப்புக்காக சமரசமா என, சுசிலீக்ஸ் புகார் தொடர்பாக பாடகி சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.சின்மயி நடத்தை குறித்து சுசிலீக்ஸில் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. வாய்ப்புக்காக சமரசம் செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டு

மேலும்...

 கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன்
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார்.எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும்

மேலும்...

 பாடகி சின்மயின் பாலியல் புகாருக்கு வைரமுத்து விளக்கம்
கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாடகி சின்மயி, பல பகீர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். உலக அளவில் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் பயன்படுத்தும் ஹாஷ்டேக்கான #MeToo மூலமே தனது தரப்பு கருத்துகளை சின்மயி, ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.சின்மயி தனது ட்விட்டரில், ‘2005 அல்லது

மேலும்...

 இடைத்தேர்தலை சந்திக்க தயங்கவில்லை ; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என்று அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த  மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது:- திருவள்ளூர் மாவட்டத்தில் தங்கள் கட்சி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164