tamilkurinji logo


 

பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை - கமல்ஹாசன்,kamal-hassan makkal needhi maiyam

kamal-hassan,makkal,needhi,maiyam
பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை - கமல்ஹாசன்

Tuesday , 10th April 2018 07:44:38 PMமக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்  கூறி இருப்பதாவது:-

30 ஆண்டுகளுக்கு முன்பே நான் எனது அரசியல் பயணத்தை தொடங்கி விட்டேன். எனது ரசிகர்களை நற்பணி மன்றங்களாக மாற்றிய போதே எனது அரசியல் பயணம் தொடங்கி விட்டது.

எனது ரசிகர் மன்றத்தை நான் தலைவரை வழிபடும் மன்றமாக வைத்திருக்கவில்லை. அதை நல்ல வி‌ஷயங்கள் செய்யும் மன்றமாக மாற்றினேன். அதற்காக நான் முதலில் மிகவும் போராட வேண்டி இருந்தது.

அப்போது மக்கள் என்னை உடனே அரசியலுக்கு வரும்படி வேண்டினார்கள். ஆனால் நான் சமுதாயப் பணி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதை பிறகு மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.

ஆனால் அதை அப்போதைய அரசு விரும்பவில்லை. எங்களுடைய நற்பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினார்கள்.

நாங்கள் சமுதாய பணிகள் மூலம் புகழ் பெற்று விடக்கூடாது என அப்போதைய அரசு நினைத்தது. சில சமயங்களில் எங்களது நற்பணிகளுக்கு சிறிய அளவிலேயே நாங்கள் விளம்பரம் செய்ய முடிந்தது.

தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் ரத்த தானம் செய்தது நாங்கள்தான். 25 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் 1 லட்சம் ஜோடி கண்களை தானம் செய்தோம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உடல் உறுப்பு தானம் செய்தோம்.

இறுதியில் உடலையே முழுமையாக தானம் செய்வதாக அறிவித்துள்ளோம்.

நாங்கள் பெற்றால்தான் பிள்ளையா? என்று ஒரு அறக்கட்டளை தொடங்கி உள்ளோம். எச்.ஐ.வி. பாதித்தவர்களின் நலனுக்காக இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அதில் ஏராளமான குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர்.

எனது ரசிகர் மன்றத்தில் சுமார் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள்தான் தெருத் தெருவாக சென்று சமுதாய பணிகளை செய்து வருகிறார்கள். ஒவ்வொரு தாலுகாவிலும் அவர்கள் உள்ளனர்.

தற்போது இதே மன நிலையில் உள்ளவர்களையும் எங்களது அணியில் சேர்த்து பணிகளை செய்து வருகிறோம். விவசாயம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் நிபுணர்களின் கருத்துக்களை பெற்று செயல்பட தொடங்கி உள்ளோம்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மூலமும் வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு சேவை செய்வதே எங்களது நோக்கமாகும்.

தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதே எங்களது இலக்காகும். மற்றப்படி நான் பணம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. இதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் தமிழகத்தின் எந்த பகுதிக்கு சென்றாலும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். நாளை நமதே என்பதே எங்களது முழக்கம். இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.    Tags :    
பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை - கமல்ஹாசன்,kamal-hassan makkal needhi maiyam பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை - கமல்ஹாசன்,kamal-hassan makkal needhi maiyam பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை - கமல்ஹாசன்,kamal-hassan makkal needhi maiyam
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காந்தி தற்கொலைக்கு நான் காரணமல்ல டிவி நடிகை நிலானி உருக்கம்
சின்னத்திரை நடிகையான நிலானி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார். இவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, போலீஸ் சீருடையில் போலீசாருக்கு எதிரான கருத்துகளை கூறி வெளியான வீடியோ

மேலும்...

 சீமராஜா'வின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி
'சீமராஜா’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.பொன்ராம்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான மூன்றாவது படம் ‘சீமராஜா’. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், லால், சூரி ஆகியோர் நடிப்பில் உருவான

மேலும்...

 இடைத்தேர்தலை சந்திக்க தயங்கவில்லை ; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என்று அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த  மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது:- திருவள்ளூர் மாவட்டத்தில் தங்கள் கட்சி

மேலும்...

 அரசியலுக்கு வரும் பெண்கள் அதிகரிக்க வேண்டும்: கமல்ஹாசன்
சுயசக்தி விருதுகள் என்ற பெண் தொழில்முனைவோர்களுக்கான விருது வழங்கும் விழா மயிலாப்பூர் தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் 11 பிரிவுகளில் 35 பெண்களுக்கு விருதுகளும், மேலும் 9 பெண்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கமல்ஹாசன் விருதுகளை வழங்கினார்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in