tamilkurinji logo


 

நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள்; குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: நடிகர் சூர்யா ,Actor surya: Latest News, Videos and Photos of Actor surya tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Actor,surya:,Latest,News,,Videos,and,Photos,of,Actor,surya,tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள்; குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: நடிகர் சூர்யா

Monday , 23rd July 2018 11:33:57 AM



நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள், குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை வழங்கியிருக்கிறார்.

இன்று (ஜூலை 23) தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா. இதற்காக சில தினங்களுக்கு முன்பு தனது ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடி இருக்க்கிறார்.

அப்போது தனது ரசிகர்கள் முன்னிலையில் சூர்யா பேசியிருப்பதாவது:

வாழ்க்கையை புதிய அனுபவங்கள்தான் மேம்படுத்தும். எப்போதும் புதுப்புது விஷயங்களை ஆர்வத்தோடு கற்றுக்கொண்டே இருங்கள். நாம் குழந்தையாக இருக்கும்போது சைக்கிள் வேண்டும் என்று ஆசைப்படுவோம். அடுத்து கொஞ்சம் வளர்ந்ததும் பைக் வேண்டும் என்று அடம்பிடிப்போம். அடுத்து கார்.

இப்படி வாழ்க்கையில் புதுசு புதுசுன்னு எப்பவும் ஒரு உற்சாகம் இருந்து கொண்டே இருக்கும். அந்த ஆர்வம் இப்போது நிறைய பேருக்கு குறையுதோ என்று தோன்றுகிறது. வாழ்க்கையில் இதுபோதும் என்று நினைக்கிறார்கள். சலிப்படையவும் செய்கிறார்கள். எப்போதுமே ஒரு புதிய அனுபவம் வைத்துக்கொள்ளுங்கள். நாம் செய்கிற வேலையில் நாம்தான் சிறந்தவராக இருக்க வேண்டும்.

என்னென்ன விஷயங்கள் கற்க வேண்டுமோ அவற்றை கற்றுக்கொண்டே இருங்கள். வாழ்க்கையில் ஒரு விஷயம் மட்டும்போதும் என்று இங்கே இல்லை. சந்தோஷம் மிகவும் முக்கியம். அது கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்து இருக்கிறது. எதற்காகவோ அந்த சந்தோஷத்தை நாம் விட்டுவிடுகிறோம். எந்த காரணத்துக்காகவும் அதை நாம் இழக்கக்கூடாது.

சந்தோஷம் என்பது சுலபமான விஷயம் இல்லை. வீடு, பணம் மட்டுமே சந்தோஷத்தை கொடுத்து விடாது. மனதை எப்போதும் சந்தோஷமாக வைத்துக்கொள்வது ஒரு கலை. எப்போதும் சிரித்து மகிழ்ச்சியாக இருப்பவர்களை நிறைய பேர் சூழ்ந்து இருப்பார்கள்.

ரசிகர்கள் என்மீது எவ்வளவு அக்கறை வைத்து இருக்கிறீர்களோ அதே அளவுக்கு எனக்கும் உங்கள் மீது அக்கறை உண்டு. உடல் உறுப்புதானம், ரத்த தானம் செய்யும் ரசிகர்கள் யாருக்கும் அடிமையாக இருக்க கூடாது. நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள். குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம் இவ்வாறு சூர்யா பேசியிருக்கிறார்.



    Tags :    
நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள்; குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: நடிகர்  சூர்யா ,Actor surya: Latest News, Videos and Photos of Actor surya tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள்; குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: நடிகர்  சூர்யா ,Actor surya: Latest News, Videos and Photos of Actor surya tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள்; குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: நடிகர்  சூர்யா ,Actor surya: Latest News, Videos and Photos of Actor surya tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கும் சூர்யா, கார்த்தி
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு

மேலும்...

 ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’: அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸ்
ஜோதிகா நடித்துள்ள ‘காற்றின் மொழி’ படம், அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘காற்றின் மொழி’. ராதாமோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிம்பு,

மேலும்...

 ராம் இயக்கியுள்ள பேரன்பு படத்தின் உருக்கமான டீசர் வெளியீடு
கற்றது தமிழ், தங்க மீன்கள் எனப் படத்துக்குப் படம் தமிழ் ரசிகர்களின் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருபவர் இயக்குநர் ராம். இவரின் அடுத்தப் படமாக உருவாகியுள்ள பேரன்பு வெளிவருவதற்கு முன்பே பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படம் சர்வதேச

மேலும்...

 “ஒழுக்கமான நடிகைகளுக்கு அவதூறு ஏற்படுத்துகிறார்”நடிகை ஸ்ரீரெட்டிக்கு கஸ்தூரி எதிர்ப்பு
“ஸ்ரீரெட்டியின் இணையதளப் பேட்டியைப் பார்த்தேன். சினிமா ஆசைகாட்டி, தங்கள் ஈன புத்திக்குப் பெண்களை இரையாக்கிக் கொள்ளும் ஓநாய்களின் முகத்திரையை கிழித்து தொங்கப்போட்டுக் கொண்டிருக்கிறார். மானாவாரியாக பெயர்களை இறைக்கிறார். சிலர் பெயரைக் கேட்டதும் அதிர்ச்சியாக உள்ளது. அவர் சொல்லும் விவரங்கள் நம்பும்படியாக உள்ளன.குறுக்கு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in