tamilkurinji logo


 

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ,Naduvula konjam pakkatha kaanom

Naduvula,konjam,pakkatha,kaanom
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

Wednesday , 5th December 2012 07:37:53 PMகதாநாயகன்-கதாநாயகி: விஜய் சேதுபதி-காயத்ரி.
டைரக்ஷன்: பாலாஜி தரணிதரன்.

விஜய் சேதுபதி, பகவதி பெருமாள், ராஜ்குமார், விக்னேஷ்வரன் ஆகிய நான்கு பேரும் நண்பர்கள். நான்கு பேரும் கிரிக்கெட் விளையாடும்போது, விஜய் சேதுபதிக்கு தலையில் அடிபட்டு விடுகிறது. அதில், அவருடைய வாழ்க்கையில் நடந்த இரண்டு வருட நினைவுகளை இழந்து விடுகிறார். அதில், அவருடைய காதலி காயத்ரியுடனான காதல் மற்றும் திருமண ஏற்பாடுகள் முக்கியமானவை.

விஜய் சேதுபதிக்கு தலையில் அடிபட்டதும், அவர் இரண்டு வருட நினைவுகளை இழந்ததும் பெண் வீட்டாருக்கு தெரிந்தால், நடைபெற இருக்கும் காதல்-கலப்பு திருமணம் நின்று விடும். அதனால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பை யாருக்கும் தெரியாமல் நண்பர்கள் மூன்று பேரும் மறைக்கிறார்கள்.

நண்பர்களின் முயற்சி வெற்றி பெற்றதா, விஜய் சேதுபதிக்கு நினைவு திரும்பியதா? என்பது, கிளைமாக்ஸ்.

தலையில் அடிபட்டு நினைவுகளை இழந்த விஜய் சேதுபதியின் முகபாவனைகளும், நடிப்பும் சிரிக்க வைக்கிறது. ÔÔஎன்ன ஆச்சு? கிரிக்கெட் ஆடினோம். நீதான் அடிச்சே. நான் கேட்ச் பிடிக்கப் போனேன். தடுமாறி கீழே விழுந்தேன். இங்கதான் அடிபட்டது. கொஞ்ச நேரத்துல சரியாகிடும்ÕÕ என்று அவர் நண்பர்களிடம் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வது, சூப்பர் காமெடி.

அவரை நண்பர்கள் மூன்று பேரும் மனநல மருத்துவரிடம் அழைத்துப் போவதும், சமாதானப்படுத்தி மணமேடை வரை கொண்டு செல்வதும், அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் காட்சிகள்.

காதலி சம்பந்தப்பட்ட நினைவுகளை அடியோடு மறந்து, மணமேடையில் தன் அருகில் நிற்கும் காயத்ரியை பார்த்து, ÔÔஇந்த பொண்ணு யாரு?ÕÕ என்று விஜய் சேதுபதி கேட்கும் இடத்தில், தியேட்டரில் ஆரவாரம் அடங்க வெகுநேரமாகிறது.

காயத்ரிக்கு ஒப்பனை அதிகமாக இருப்பதை பார்த்து, "பேய் மாதிரி இருக்கு" விஜய் சேதுபதி சொல்வது; அதைக்கேட்டு காயத்ரி விம்மி அழுவது; "டேய், நான் என்ன சொன்னாலும் கேட்பாய் இல்லையா?" என்று விஜய் சேதுபதியிடம் நண்பர் கேட்க- "நீ சொன்னா இந்த கட்டிடத்தில் இருந்து கூட குதிப்பேன்டா" என்று விஜய் சேதுபதி சொல்வது; அதைப்பயன்படுத்தி அவரை நண்பர் கட்டுப்படுத்துவது என நிமிடத்துக்கு நிமிடம் படத்தில், காமெடி ரகளை.

விஜய் சேதுபதிக்கு ஏற்பட்ட பாதிப்பை பெண் வீட்டாரிடம் மறைப்பது சரி. அவர் பெற்றோர்களிடம் கூட சொல்லாமல், மூடி மறைப்பது ஏன்? என்ற கேள்விக்கு, படத்தில் பதில் இல்லை. வேத்சங்கரின் பின்னணி இசையும், பிரேம்குமாரின் ஒளிப்பதிவும் கதையை வேகமாக நகர்த்தி செல்லும் அம்சங்கள்.

ஒரு வீடு, மருத்துவமனை, கல்யாண மண்டபம் ஆகிய மூன்று அரங்குக்குள் முழு கதையும் சொல்லப்படுகிறது. திரைக்கதை பலமாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தால், சிக்கனமாக படம் எடுத்து ஜெயிக்க முடியும் என்று நிரூபித்து இருக்கிறார், டைரக்டர் பாலாஜி தரணிதரன்.     Tags :    
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ,Naduvula konjam pakkatha kaanom நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ,Naduvula konjam pakkatha kaanom நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ,Naduvula konjam pakkatha kaanom
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஹரிதாஸ் - விமர்சனம்
கிஷோர், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட். தாதா பிரதீப் ராவத் குழுவை தீர்த்துக்கட்ட வேண்டியது, அவருக்கான அசைன்மெண்ட். அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது, தன் மகனைக் காப்பாற்ற வேண்டிய கடமை வந்து சேர்கிறது. மகனைப் பிரசவித்த அன்றே இறந்து விடுகிறார் கிஷோரின் மனைவி. கிராமத்திலுள்ள தன்

மேலும்...

 முகமூடி - விமர்சனம்
கொள்ளைக் கும்பலின் 'முகமூடி’யைக் கிழிக்கும் சூப்பர் ஹீரோ! திட்டமிட்டு முகமூடி அணிந்து கொலை, கொள்ளையில் ஈடுபடுகிறார் நரேன். யதேச்சையாக முகமூடி அணிந்து அவர்களுக்கு இடையூறு செய்கிறார் ஜீவா. பிறகு, அந்த 'முகமூடி’ அடையாளத்துடனேயே கெட்டவர்களை அழிக்... ஆவ்வ்...கிறார்!    சூப்பர் ஹீரோ உருவாகும் வித்தையை,

மேலும்...

 மனம் கொத்திப் பறவை - திரை விமர்சனம்
எதிர்வீட்டுக்காரர்களான சிவகார்த்திகேயனும், ஆத்மியாவும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். உரிய பருவத்தில் இருவருக்கும் காதல் பூக்கிறது. சிவகார்த்திகேயன் நண்பர்களிடம் சின்ன சின்ன பொய் சொல்லி தன் காதலை வளர்க்கிறார். தன் குடும்பத்தினர் இதை ஏற்கமாட்டார்கள் என்பதால் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய சம்மதிக்கிறார்

மேலும்...

 தடையறத் தாக்க - திரை விமர்சனம்
டிராவல்ஸ் நடத்தும் அருண் விஜய், காதலி மம்தாவை மணந்து அமைதியான வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறார். விதி விளையாடுகிறது. நண்பர் ஒருவர் கந்துவட்டி தாதாவிடம் கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பிக் கொடுக்க முடியாததால் தாதாக் கூட்டம் கடத்திச் செல்கிறது. நிர்க்கதியாக நிற்கும் நண்பரின்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164