tamilkurinji logo
 

நடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனா திருமணம்: முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின், ரஜினி, கமல் வாழ்த்து,Kannathil Muthamittal actor Keerthana ties the knot, Rajinikanth and Kamal Haasan in attendance. tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Kannathil,Muthamittal,actor,Keerthana,ties,the,knot,,Rajinikanth,and,Kamal,Haasan,in,attendance.,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




நடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனா திருமணம்: முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின், ரஜினி, கமல் வாழ்த்து

Friday , 9th March 2018 08:25:12 PM



நடிகரும், டைரக்டருமான பார்த்திபன் மகள் திருமணம், சென்னையில் நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர்-டைரக்டர் ஆர்.பார்த்திபன்-நடிகை சீதா தம்பதியின் இளைய மகள், கீர்த்தனா. மணிரத்னம் டைரக்டு செய்த ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில், இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார்.

சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்ற இவர், சென்னை லயோலா கல்லூரியில், ‘விஸ்காம்’ படித்து பட்டதாரி ஆனார். அதன் பிறகு, டைரக்டர் மணிரத்னத்திடம் உதவி டைரக்டராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கும், லயோலா கல்லூரியில் ‘விஸ்காம்’ படித்த அக்‌ஷய் அக்னினேனிக்கும் காதல் மலர்ந்தது. அக்‌ஷய், பிரபல படத்தொகுப்பாளர் ஸ்ரீகர்பிரசாத்தின் மகன் ஆவார். கீர்த்தனா-அக்‌ஷய் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். அதற்கு இரண்டு பேரின் பெற்றோர்களும் பச்சைக்கொடி காட்டினார்கள்.

அதைத்தொடர்ந்து கீர்த்தனா-அக்‌ஷய் திருமணம், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று காலை 9 மணிக்கு நடந்தது. திருமண நிகழ்ச்சிகள், வைதீக முறைப்படி நடந்தன. கீர்த்தனா கழுத்தில் அக்‌ஷய் தாலி கட்டினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ், ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சூர்யா, சரத் குமார்-ராதிகா சரத்குமார், டைரக்டர் மணிரத்னம்-சுஹாசினி, நடிகர் சங்க செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவருமான விஷால், ஜெயம் ரவி, பிரபுதேவா, விக்ரம் பிரபு, விவேக், நடிகைகள் ஸ்ரீப்ரியா, குஷ்பு, மீனா, சுகன்யா, குட்டி பத்மினி, டைரக்டர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிகுமார், பாலா, லிங்குசாமி, ஆர்.வி.உதயகுமார், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், அறிவழகன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஹாரீஸ் ஜெயராஜ், கவிஞர் வைரமுத்து, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பட அதிபர்கள் ஆர்.பி.சவுத்ரி, டி.சிவா, மாணிக்கம் நாராயணன், எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்களும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

அனைவரையும் பார்த்திபன், சீதா ஆகிய இருவரும் வரவேற்றார்கள்.



    Tags :    
நடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனா திருமணம்: முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின், ரஜினி, கமல் வாழ்த்து,Kannathil Muthamittal actor Keerthana ties the knot, Rajinikanth and Kamal Haasan in attendance. tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனா திருமணம்: முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின், ரஜினி, கமல் வாழ்த்து,Kannathil Muthamittal actor Keerthana ties the knot, Rajinikanth and Kamal Haasan in attendance. tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
நடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனா திருமணம்: முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின், ரஜினி, கமல் வாழ்த்து,Kannathil Muthamittal actor Keerthana ties the knot, Rajinikanth and Kamal Haasan in attendance. tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மீண்டும் இணையும் ‘விக்ரம் வேதா’ ஜோடி
விக்ரம் வேதா’ படத்தில் ஜோடியாக நடித்த மாதவன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவரும் மறுபடியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. விஜய் சேதுபதி -மாதவன்  முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த

மேலும்...

 டிராபிக் ராமசாமி திரைப்படம் விஜய் பிறந்தநாளன்று வெளியீடு
டிராபிக் ராமசாமி’ படம், விஜய் பிறந்த நாளில் வெளியாவது பெருமையாக இருக்கிறது படத்தின் டைரக்டர் கூறினார்.சமுதாயத்துக்கும், சட்டத்துக்கும் தீங்கு செய்தவர்களை திரைப்படம் மூலமாக சுட்டிக்காட்டி, ‘புரட்சி இயக்குனர்’ என்று பெயர் எடுத்தவர், எஸ்.ஏ.சந்திரசேகர். இவர், சமூக சேவகர் ‘டிராபிக் ராமசாமி’யாக ஒரு

மேலும்...

 கோவை அருகே பிரபல கன்னட நடிகர் துனியா விஜய் கைது
கடந்த வருடம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பின்போது 2 துணை நடிகர்கள் அணையில் இருந்து தவறி விழுந்து இறந்தனர். இது தொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.இந்த நிலையில் கோர்ட்டில் ஆஜராகாததால் தயாரிப்பாளர்

மேலும்...

 ஆறுதல் கூறுவது எப்படி என விஜயிடம் இருந்து ரஜினி கற்க வேண்டும் : அமீர் விமர்சனம்
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி என்பதை விஜயிடம் இருந்து ரஜினிகாந்த் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் அமீர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match














மகளிர்











Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in