tamilkurinji logo
 

திருமணத்துக்கு முன் கரீனாகபூர் கர்ப்பமா? - இன்டர்நட்டில் வெளியான படத்தால் பரபரப்பு,


திருமணத்துக்கு முன் கரீனாகபூர் கர்ப்பமா? - இன்டர்நட்டில் வெளியான படத்தால் பரபரப்பு

Monday , 6th February 2012 07:04:21 AM



இந்தி நடிகை கரீனா கபூருக்கும், நடிகர் சயீப் அலிகானுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. திருமண நிச்சயதார்த்தம் வருகிற 10-ந்தேதி நடைபெற உள்ளது. பல வருடங்களாக காதலர்களாக வலம் வந்த இருவரும் இப்போது திருமணத்துக்கு தயாரானதற்குக் காரணம் கரீனாகபூர் கர்ப்பமாக இருப்பதுதான் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

அவர் கர்ப்பமாக இருப்பது போன்ற படங்களும் இன்டர்நெட்டில் வெளியாகி உள்ளன. சமீபத்தில் கரீனாகபூர் விமான நிலையத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது டீசர்ட்டும், ஜீன்ஸ் பேண்டும் அணிந்து இருந்தார். டீசர்ட் மேல் சால்வை போட்டு இருந்தார். வயிறு கர்ப்பவதிபோல் பெரிதாக இருந்தது. அதை சால்வை போட்டு மறைத்தார்.

இதை அங்கிருந்த போட்டோகிராபர் ஒருவர் படம் பிடித்து இன்டர்நட்டில் வெளியிட்டு உள்ளார். வயிறு பெரிதாக இருப்பதற்கு காரணம் கர்ப்பம்தானா? என்று உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் கரீனாகபூருக்கு நெருக்கமான ஒருவர் இதனை மறுத்தார். ‘கரீனா கர்ப்பம் இல்லை. ஏதோ ஒரு புகைப்படத்தை காரணம் காட்டி அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறுவது சரியல்ல. இன்டர்நெட்டில் வெளியான புகைப்படம் தவறான கோணத்தில், தவறான எண்ணத்துடன் படம் பிடிக்கப்பட்டுள்ளது. யாரோ திட்டமிட்டு இந்த வதந்தியை பரப்பி உள்ளனர். கரீனா இந்தி படங்களில் ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டிருக்கிறார். வரும் 20ம் தேதி முதல் மதுர் பண்டர்கரின் படத்தில் நடிக்கிறார். இதற்காக 30 நாள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்‘ என்று கூறினார்.



    Tags :    
திருமணத்துக்கு முன் கரீனாகபூர் கர்ப்பமா? - இன்டர்நட்டில் வெளியான படத்தால் பரபரப்பு, திருமணத்துக்கு முன் கரீனாகபூர் கர்ப்பமா? - இன்டர்நட்டில் வெளியான படத்தால் பரபரப்பு, திருமணத்துக்கு முன் கரீனாகபூர் கர்ப்பமா? - இன்டர்நட்டில் வெளியான படத்தால் பரபரப்பு,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சல்மான்கானுடன் எனக்கு திருமணமா? நடிகை அசின் மறுப்பு
ஜெனிலியா-ரிதேஷ் திருமணத்தை தொடர்ந்து அசினுக்கும் சல்மான்கானுக்கும் விரைவில் திருமணம் நடக்கப்போவதாக இந்தி டெலிவிஷன்களிலும் பத்திரிகைகளிலும் பரபரப்பு செய்திகள் வெளியாகி உள்ளன.அசினும் சல்மான்கானும் லண்டன் டிரீம்ஸ், ரெடி படங்களில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணத்துக்கு இருவரும் தயாராகிறார்கள் என்று

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in