tamilkurinji logo


 

சீமராஜா'வின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி,Seema Raja box office collection Day 1: Sivakarthikeyan film gets a grand welcome

Seema,Raja,box,office,collection,Day,1:,Sivakarthikeyan,film,gets,a,grand,welcome




சீமராஜா'வின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி

Friday , 14th September 2018 01:59:01 PM



'சீமராஜா’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பொன்ராம்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான மூன்றாவது படம் ‘சீமராஜா’. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், லால், சூரி ஆகியோர் நடிப்பில் உருவான இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று வெளியானது.

ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்ற 'சீமராஜா' படத்தின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி என்று தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்தியில், ''சீமராஜா படம் பார்க்க முதல் நாளே திரை அரங்குகளுக்கு குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வருகிறார்கள் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கூறும் போது உள்ளம் பூரிப்பு அடைகிறது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூல் சாதனையை இந்தப் படம் முறியடிக்கும் என்பதில் எந்த வித ஐயம் இல்லை. முதல் நாள் வசூலே ரூ.13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது. 550 காட்சிகள் திரையிடப்பட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் மேலும் கூடும்" என்று ஆர்.டி.ராஜா தெரிவித்துள்ளார்.



    Tags :    
சீமராஜா'வின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி,Seema Raja box office collection Day 1: Sivakarthikeyan film gets a grand welcome சீமராஜா'வின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி,Seema Raja box office collection Day 1: Sivakarthikeyan film gets a grand welcome சீமராஜா'வின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி,Seema Raja box office collection Day 1: Sivakarthikeyan film gets a grand welcome
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in