tamilkurinji logo


 

கள்ள நோட்டு அச்சடித்ததாக தாய் மற்றும் தங்கையுடன் பிரபல நடிகை கைது ,Malayalam TV actress Surya Sashikumar, mom, sister held in fake tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Malayalam,TV,actress,Surya,Sashikumar,,mom,,sister,held,in,fake,tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




கள்ள நோட்டு அச்சடித்ததாக தாய் மற்றும் தங்கையுடன் பிரபல நடிகை கைது

Thursday , 5th July 2018 01:04:24 PM



கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அணைக்கரை பகுதியில் சில நாட்களுக்கு முன்பு போலீசார் வாகன சோதனை நடத்தினர் . அப்போது ஒரு காரில் சந்தேகத்திற்கு இடமாக 3 பேர் இருந்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்கள் பெயர் ரவீந்திரன், லியோ, கிருஷ்ணகுமார் என்பது தெரியவந்தது. அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்கள் வந்த காரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் ஒரு பெரிய பையில் இரண்டரை லட்சம் ரூபாய் கள்ள நோட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அப்போது இந்த கள்ள நோட்டு கும்பலின் பின்னணியில் மலையாள டி.வி. நடிகை ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து ரகசியம் காத்த போலீசார், கொல்லத்தில் வசிக்கும் அந்த நடிகையின் சொகுசு பங்களாவை கண்காணிக்க தொடங்கினார்கள். அப்போது அந்த பங்களாவுக்கு சந்தேகப்படும் படியாக அடிக்கடி ஆட்கள் சென்று வருவது தெரிய வந்தது.

இதைதொடர்ந்து நேற்று அதிகாலை நேரத்தில் போலீஸ் படையினர் அந்த பங்களாவில் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அந்த பங்களாவில் வசித்த மலையாள டி.வி. நடிகை சூரிய சசிகுமார்  அவரது தாயார் ரமா தேவி தங்கை சுருதி ஆகியோரை கைது செய்தனர்.அங்கிருந்து ரூ.57 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளும் கைப்பற்றபட்டது.

அவர்கள் கம்ப்யூட்டர், ஸ்கேனர் உள்பட நவீன கருவிகள் மூலம் கள்ள நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்டது விசாரணையில் தெரியவந்தது. கடந்த 8 மாதங்களாக இந்த பங்களாவில் கள்ள நோட்டு அச்சடித்து அவர்கள் புழக்கத்தில் விட்டுள்ளதும் தற்போது தெரிய வந்துள்ளது.



    Tags :    
கள்ள நோட்டு அச்சடித்ததாக  தாய் மற்றும் தங்கையுடன்  பிரபல நடிகை கைது ,Malayalam TV actress Surya Sashikumar, mom, sister held in fake tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema கள்ள நோட்டு அச்சடித்ததாக  தாய் மற்றும் தங்கையுடன்  பிரபல நடிகை கைது ,Malayalam TV actress Surya Sashikumar, mom, sister held in fake tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema கள்ள நோட்டு அச்சடித்ததாக  தாய் மற்றும் தங்கையுடன்  பிரபல நடிகை கைது ,Malayalam TV actress Surya Sashikumar, mom, sister held in fake tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காந்தி தற்கொலைக்கு நான் காரணமல்ல டிவி நடிகை நிலானி உருக்கம்
சின்னத்திரை நடிகையான நிலானி, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார். இவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து, போலீஸ் சீருடையில் போலீசாருக்கு எதிரான கருத்துகளை கூறி வெளியான வீடியோ

மேலும்...

 சீமராஜா'வின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி
'சீமராஜா’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.பொன்ராம்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான மூன்றாவது படம் ‘சீமராஜா’. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், லால், சூரி ஆகியோர் நடிப்பில் உருவான

மேலும்...

 இடைத்தேர்தலை சந்திக்க தயங்கவில்லை ; மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என்று அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த  மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது:- திருவள்ளூர் மாவட்டத்தில் தங்கள் கட்சி

மேலும்...

 அரசியலுக்கு வரும் பெண்கள் அதிகரிக்க வேண்டும்: கமல்ஹாசன்
சுயசக்தி விருதுகள் என்ற பெண் தொழில்முனைவோர்களுக்கான விருது வழங்கும் விழா மயிலாப்பூர் தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் 11 பிரிவுகளில் 35 பெண்களுக்கு விருதுகளும், மேலும் 9 பெண்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கமல்ஹாசன் விருதுகளை வழங்கினார்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in