tamilkurinji logo


 

எங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா,Enga Veetu Mapillai: Actor Arya refuses to select his bride in dramatic ...

Enga,Veetu,Mapillai:,Actor,Arya,refuses,to,select,his,bride,in,dramatic,...




எங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா

Friday , 20th April 2018 08:26:58 PM



எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் தன்னுடைய ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் ஆர்யா நழுவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. ஆர்யாவுக்கு ஏற்ற பெண்ணை, ஆர்யாவே தேர்ந்தெடுப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். நடிகை சங்கீதா தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் ஃபைனல், நேற்று ஒளிபரப்பானது.

அகதா, சுசனா மற்றும் சீதாலட்சுமி மூவரும் இறுதிக்கட்ட போட்டியாளர்களாகக் களத்தில் நின்றனர். இந்த மூவரில் யாரை ஆர்யா தேர்ந்தெடுக்கப் போகிறார் என்பதைக் காண அனைவரும் ஆர்வத்தோடு காத்திருந்தனர்.

“இந்த மூன்று பேரில் நான் யாரைத் தேர்ந்தெடுத்தாலும், மற்ற இரண்டு பேரும், அவர்களின் குடும்பமும் வருத்தப்படுவார்கள். தேர்வு செய்யப்படாத பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும்.

அதுவும் ஒரு மேடையில் இப்படிச் செய்ய எனக்கு மனதே வரவில்லை. கல்யாண மேடை போல இருக்கும் இங்கு, யாரையும் என்னால் வருத்தப்பட வைக்க முடியாது. நிச்சயம் என்னால் அதைச்செய்ய முடியாது.

எனக்கு இன்னும் நேரம் தேவை. கேமரா, மைக் இல்லாமல் இன்று முதல் தொடக்கமாக இருக்கட்டும். வேறு வேறு வழிகளில் நாங்கள் தொடர்பில் இருப்போம்” என்று சொல்லி, யாரையுமே தேர்ந்தெடுக்காமல் நழுவி விட்டார் ஆர்யா.

ஆர்யாவின் இந்த முடிவை, சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். ‘இது முழுக்க முழுக்க திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி. ஆர்யா ஒருவரைத் திருமணம் செய்து கொள்வார் என்று நீங்கள் நினைத்திருந்தால், உங்களைப் போல முட்டாள் யாரும் இருக்க முடியாது’ என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.



    Tags :    
எங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா,Enga Veetu Mapillai: Actor Arya refuses to select his bride in dramatic ... எங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா,Enga Veetu Mapillai: Actor Arya refuses to select his bride in dramatic ... எங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா,Enga Veetu Mapillai: Actor Arya refuses to select his bride in dramatic ...
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ராம் இயக்கியுள்ள பேரன்பு படத்தின் உருக்கமான டீசர் வெளியீடு
கற்றது தமிழ், தங்க மீன்கள் எனப் படத்துக்குப் படம் தமிழ் ரசிகர்களின் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருபவர் இயக்குநர் ராம். இவரின் அடுத்தப் படமாக உருவாகியுள்ள பேரன்பு வெளிவருவதற்கு முன்பே பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படம் சர்வதேச

மேலும்...

 பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
காவல்துறை அதிகாரியாக பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது படக்குழு.‘யங் மங் சங்’, ‘லக்‌ஷ்மி’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘காமோஷி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ’பொன் மாணிக்கவேல்’ படத்தில் நடித்து வருகிறார் பிரபுதேவா. இப்படத்தில், காவல்துறை

மேலும்...

 ரன்வீர்சிங் - தீபிகா படுகோனேவுக்கு விரைவில் திருமணம்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகன், நாயகியாக வலம் வரும் ரன்வீர்சிங் - தீபிகா படுகோனே திருமணம் வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழில் ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த தீபிகா படுகோனே இந்தி பட

மேலும்...

 சிம்பு மட்டுமல்ல, எந்த ஹீரோவுடனும் தொடர்பில் இல்லை.மஞ்சிமா மோகன்
கேரளாவைச் சேர்ந்த மஞ்சிமா மோகன், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். கவுதம் மேனன் இயக்கிய இந்தப் படத்தில், சிம்பு ஹீரோவாக நடித்தார். பெரும்பாலானவர்களுக்கு இந்தப் படம் பிடித்திருந்தது. குறிப்பாக, சிம்பு - மஞ்சிமா இடையேயான ரொமான்ஸும், படத்தில்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in