tamilkurinji logo


 

ஆண்டாள் பற்றிய விமர்சனம் - வருத்தம் தெரிவித்த வைரமுத்து ,Vairamuthu explains on Aandal Controversy |tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Vairamuthu,explains,on,Aandal,Controversy,|tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




ஆண்டாள் பற்றிய விமர்சனம் - வருத்தம் தெரிவித்த வைரமுத்து

Tuesday , 9th January 2018 07:06:46 PM



ஆண்டாள் பற்றி தவறாக பேசிய வைரமுத்துவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், புண்படுத்துவது என் நோக்கமன்று, என்று வைரமுத்து விளக்கம் அளித்திருக்கிறார்.

கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழை ஆண்டாள் என்ற கட்டுரைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்த வண்ணமாக இருக்கின்றன.

தினமணி நாளிதழ் சார்பில், ஸ்ரீவில்லிப்புத்தூரில் நேற்று ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் வைரமுத்து பேசிய சில கருத்துகள் சர்ச்சையக்குரியதாக இருந்ததாம்.

ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுளுக்கிடையே உள்ள வித்தியாசம் குறித்து வைரமுத்து விளக்கிய விதத்தால் கருத்தரங்குக்கு வந்திருந்தவர்கள் அதிருப்தியில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில், ஆண்டாள் குறித்த வைரமுத்து தெரிவித்த எதிர்மறையான கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக-வின் எச்.ராஜா, அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வைரமுத்து அவரது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்; அது எனது கருத்தன்று. ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து.

ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை. ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துக்களெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர்.

எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.



    Tags :    
ஆண்டாள் பற்றிய விமர்சனம் - வருத்தம் தெரிவித்த  வைரமுத்து ,Vairamuthu explains on Aandal Controversy |tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
ஆண்டாள் பற்றிய விமர்சனம் - வருத்தம் தெரிவித்த  வைரமுத்து ,Vairamuthu explains on Aandal Controversy |tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
ஆண்டாள் பற்றிய விமர்சனம் - வருத்தம் தெரிவித்த  வைரமுத்து ,Vairamuthu explains on Aandal Controversy |tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வாய்ப்புக்காக சமரசமா? - ‘சுசிலீக்ஸ்’ புகாருக்கு பாடகி சின்மயி விளக்கம்
வாய்ப்புக்காக சமரசமா என, சுசிலீக்ஸ் புகார் தொடர்பாக பாடகி சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.சின்மயி நடத்தை குறித்து சுசிலீக்ஸில் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. வாய்ப்புக்காக சமரசம் செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டு

மேலும்...

 கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன்
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் அவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார்.எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும்

மேலும்...

 பாடகி சின்மயின் பாலியல் புகாருக்கு வைரமுத்து விளக்கம்
கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாடகி சின்மயி, பல பகீர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். உலக அளவில் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் பயன்படுத்தும் ஹாஷ்டேக்கான #MeToo மூலமே தனது தரப்பு கருத்துகளை சின்மயி, ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.சின்மயி தனது ட்விட்டரில், ‘2005 அல்லது

மேலும்...

 அரசியலுக்கு வரும் பெண்கள் அதிகரிக்க வேண்டும்: கமல்ஹாசன்
சுயசக்தி விருதுகள் என்ற பெண் தொழில்முனைவோர்களுக்கான விருது வழங்கும் விழா மயிலாப்பூர் தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் 11 பிரிவுகளில் 35 பெண்களுக்கு விருதுகளும், மேலும் 9 பெண்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கமல்ஹாசன் விருதுகளை வழங்கினார்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in

Warning: mysql_close(): 3 is not a valid MySQL-Link resource in /home/content/14/7948114/html/tamilkurinji/footer.php on line 164